There is gold and a multitude of rubies, But the lips of knowledge are a precious jewel. Proverbs 20:15.
King Solomon highlights the value of wise words, saying they are more precious than gold or rubies. While gold and rubies represent material wealth, "lips of knowledge" symbolize wisdom and understanding that come from a heart filled with Godly insight. This reminds us that spiritual wisdom is far greater than earthly riches, just as Jesus taught about the importance of storing spiritual treasures in heaven rather than focusing on earthly possessions. This verse serves as a reminder of the fleeting nature of worldly riches and the eternal significance of wisdom and knowledge in shaping our character and actions. Let us seek and share wisdom, seeing it as a treasure far more valuable than material wealth. What do you value more—material wealth or the wisdom and understanding that come from God? Proverbs 2:6 says: "For the LORD gives wisdom; From His mouth come knowledge and understanding."
பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம். நீதிமொழிகள் 20:15.
ஞானமான வார்த்தைகளின் மதிப்பை சாலொமோன் ராஜா சிறப்பித்துக் காட்டுகிறார். பொன்னையும், மாணிக்கத்தையும்விட அவை மதிப்புமிக்கவை என்று சொல்கிறார். பொன்னும் மாணிக்கக்கற்களும் பொருட்செல்வத்தை பிரதிபலிக்கும்போது, "அறிவின் உதடுகள்" என்பது தேவன் நிரப்பிய உள்ளத்திலிருந்து வரும் ஞானத்தையும் புரிதலையும் குறிக்கிறது. பூமிக்குரிய செல்வங்களைவிட ஆன்மீக ஞானம் மிக உயர்ந்தது என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. பூமிக்குரிய சொத்துக்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் பரலோகத்தில் ஆவிக்குரிய பொக்கிஷங்களைச் சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசு கற்பித்ததைப் போலவே, பூமிக்குரிய செல்வத்தை விட ஆன்மீக ஞானம் மிக பெரியது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இந்த வசனம் அழிந்துபோகிற உலக செல்வத்தையும், அழியாத ஞானமும் அறிவும் நமது குணத்தையும் செயல்களையும் வடிவமைப்பதை நினைவூட்டுகிறது. நாம் ஞானத்தை நாடி, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து, அதனை பொருட்செல்வங்களை விட மிக உயர்ந்த செல்வமாகக் கருத வேண்டும். எதை நீங்கள் அதிகமாக மதிக்கிறீர்கள் - பொருள் செல்வத்தையா அல்லது தேவனிடமிருந்து வரும் ஞானம் மற்றும் அறிவையா? நீதிமொழிகள் 2:6 சொல்லுகிறது: “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”
Comments
Post a Comment