"Blog Y2 072 - God's redeeming love brings hope."
And rescued us from our enemies, For His mercy endures forever. Psalm 136:24.
This verse is a powerful declaration of God's redeeming love and mercy. It serves as a reminder of His enduring faithfulness and provides hope and assurance to those facing challenges. The verse speaks to the deep human longing for protection, deliverance, and eternal love. Symbolically, the theme of redemption from enemies can be understood as salvation through Christ. Jesus is often described as the Redeemer who saves us from sin and spiritual death. The concept of "enemies" can also be interpreted in a spiritual sense, representing the forces of evil and darkness that seek to separate humanity from God. Through Christ's sacrifice and resurrection, we are redeemed and delivered from the power of sin and death, finding freedom and salvation in God's boundless mercy. Are you embracing God's redeeming love and the salvation offered through Christ? Psalm 79:9 says: “Help us, O God of our salvation, For the glory of Your name; And deliver us, and provide atonement for our sins, For Your name’s sake.”
நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:24.
இந்த வசனம் தேவனுடைய மீட்கும் அன்பு மற்றும் இரக்கத்தின் வல்லமையான அறிவிப்பாகும். இது அவரது நிலையான விசுவாசத்தைக் குறிப்பிட்டு, சவால்களை எதிர்கொள்ளும் அனைவருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வழங்குகிறது. மேலும் பாதுகாப்பு, விடுதலை மற்றும் நித்திய அன்பிற்கான ஆழமான மனித ஆர்வத்தைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது. பொதுவாக எதிரிகளிடமிருந்து மீட்ப்பைப்பற்றி பேசுவதை கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பு என்று புரிந்து கொள்ளலாம். இயேசுவே நம்மை பாவத்திலிருந்தும் ஆவிக்குரிய மரணத்திலிருந்தும் இரட்சிக்கிற மீட்பர் என்று விவரிக்கப்படுகிறார். "எதிரிகள்" என்ற கருத்தை ஆன்மீக அர்த்தத்திலும் விளக்கலாம், இது மனிதகுலத்தை தேவனிடமிருந்து பிரிக்க முற்படும் தீய மற்றும் அந்தகார சக்திகளைக் குறிக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நாம் பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து மீட்கப்பட்டு விடுவிக்கப்படுகிறோம். தேவனுடைய எல்லையற்ற இரக்கத்தில் விடுதலையையும் இரட்சிப்பையும் கண்டடைகிறோம். தேவனுடைய மீட்கும் அன்பையும், கிறிஸ்துவின் மூலம் வழங்கப்படும் இரட்சிப்பையும் நீங்கள் தழுவிக்கொள்கிறீர்களா? சங்கீதம் 79:9 கூறுகிறது: "எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.”
Comments
Post a Comment