"Blog Y2 079 - Trust in God's mercy and guidance"

The Lord takes pleasure in those who fear Him, In those who hope in His mercy. Psalm 147:11.

The psalmist speaks of the favor God shows to those who fear Him and place their hope in His mercy. The fear of the Lord signifies humility, obedience, and acknowledgment of God's supremacy. It embodies reverence, awe, and respect for God's authority and power, recognizing His holiness and the necessity of honoring and obeying Him. Hope in His mercy reflects trust, confidence, and reliance on God's grace and compassion—a demonstration of faith and belief in His goodness and provision. This verse stands as a timeless reminder of the enduring truth: God delights in those who revere Him and trust in His unfailing love. Do you wholeheartedly trust in God’s mercy and live in reverence to His authority? Proverbs 3:5,6 says: "Trust in the LORD with all your heart, And lean not on your own understanding; In all your ways acknowledge Him, And He shall direct your paths."

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 147:11.

தேவன் தமக்கு பயந்து, தம்முடைய இரக்கத்தில் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு காட்டும் கிருபையைப் பற்றி சங்கீதக்காரனாகிய தாவீது பேசுகிறார். இது கர்த்தருக்குப் பயப்படுதல், மனத்தாழ்மை, கீழ்ப்படிதல் மற்றும் தேவனுடைய மகத்துவத்தை ஒப்புக்கொள்வதைக் குறிக்கிறது. இவைகள் தேவனுடைய அதிகாரம் வல்லமை, பயபக்தி, மற்றும் மரியாதையை உள்ளடக்கியது. அவருடைய பரிசுத்தத்தையும் அவரை கனப்படுத்தி கீழ்ப்படிவதன் அவசியத்தையும் அங்கீகரிக்கிறது. அவருடைய இரக்கத்தில் நம்பிக்கை, மற்றும் கிருபையைப் பிரதிபலித்து, தேவன் நம்முடைய நன்மை மற்றும் தேவைகளை சந்திப்பதை நிரூபிக்கிறது. இந்த வசனம், ஆண்டவருக்கு மரியாதை செய்து அவரது நிலையான அன்பில் நம்பிக்கை வைப்பவர்களிடம் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதை நினைவூட்டுகிறது.  நீங்கள் தேவனுடைய இரக்கத்தை முழு இருதயத்தோடு நம்பி, பயபக்தியுடன்  அவருடைய அதிகாரத்திற்குக் கீழ்படிகிறீர்களா? நீதிமொழிகள் 3:5,6 சொல்லுகிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”

 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"

"Honor the Lord"

"Blog Y2 096 - Zion: Majesty, Holiness, and Glory"

"Faithful prayer heals the sick"

Blog # Y2 005 - "Meekness Brings Peace and Blessings"