"Blog Y2 087 - Serve humbly, love like Christ."ச
Apostle Paul encourages the believers in Philippi to imitate the humility of Christ and live in harmony with one another. His command is clear and applies to all believers, regardless of maturity or authority. We are called to treat others with humility and selflessness. However, this doesn’t mean neglecting our own needs entirely—caring for ourselves enables us to serve others effectively. Paul’s instruction goes beyond helping just one person. Believers are called to serve the needs of a group, starting with their faith community and extending to those outside it, including both believers and unbelievers. This reflects the call to fulfill the Great Commission by demonstrating Christ’s love to all. Are you ready to demonstrate Christ’s humility and love by serving others selflessly, starting within your community and extending to all, as a reflection of His command to love your neighbor? Leviticus 19:18 says: "You shall not take vengeance, nor bear any grudge against the children of your people, but you shall love your neighbor as yourself: I am the LORD."
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2:4.
அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியில் உள்ள விசுவாசிகளுக்கு கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றி ஒற்றுமையில் வாழ ஊக்குவிக்கிறார். அவர் சொல்லுவது தெளிவானதும், முதிர்ச்சி அடைந்தவர்களுக்கோ, அதிகாரமுள்ளவர்களுக்கோ, அனைத்து விசுவாசிகளுக்கும் பொருந்தும். மற்றவர்களைப் பணிவுடனும் தன்னலமற்ற தன்மையுடனும் நடத்த நாம் அழைக்கப்படுகிறோம். இருப்பினும், இது நம் சொந்த தேவைகளை முற்றிலுமாக புறக்கணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை - நம்மை கவனித்துக்கொள்வது மற்றவர்களுக்கு திறம்பட சேவை செய்ய உதவுகிறது. பவுல் கொடுக்கும் அறிவுரை ஒருவருக்கு மட்டுமன்றி அநேகருக்கும் பொருந்தும். விசுவாசிகள் ஒரு குழுவின் தேவைகளுக்கு சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள், முதலாவது அவர்களுடைய சொந்த விசுவாச சபையில் தொடங்கி, விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் உட்பட அதற்கு வெளியே உள்ளவர்களுக்கும் உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள். இது அனைவருக்கும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் இயேசுவினுடைய பிரதான கட்டளையையும் நிறைவேற்றி அவருடைய அழைப்பையும் நிறைவேற்றுகிறது. உன்னைப்போல பிறனை நேசி என்ற இயேசுவின் கட்டளையின்படி , உங்கள் சமூகத்திற்குள் தொடங்கி, அனைவருக்கும் விரிவுபடுத்தி, தன்னலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிறிஸ்துவின் மனத்தாழ்மையையும் அன்பையும் நிரூபிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? லேவியராகமம் 19:18 கூறுகிறது: “பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.”
Comments
Post a Comment