"Blog Y2 092 - Live Wisely, Reap Blessings"

Listen to me, my children, For blessed are those who keep my ways. Proverbs 8:32.

Today’s verse conveys a message of the value of wisdom and blessings that come from living in accordance with its teachings. This implies that there is a positive outcome or reward for those who not only listen to wisdom’s teachings but also act upon them. It is a call to humility, openness, and obedience. The idea of “keeping” wisdom’s ways suggests a life of obedience and adherence to the principles and values that wisdom represents. This echoes the broader biblical concept of obedience leading to blessings and disobedience leading to curses. Do you strive to not only listen to wisdom’s teachings but also act upon them, embracing a life of humility, obedience, and integrity as described in today’s verse? Matthew 7:24 says: "Therefore whoever hears these sayings of Mine, and does them, I will liken him to a wise man who built his house on the rock."

பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீதிமொழிகள் 8:32.

இன்றைய வசனம் ஞானத்தின் மதிப்பு மற்றும் அதின் போதனைகளின் படி வாழ்வதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கிறது. ஞானத்தின் போதனைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படுபவர்களுக்கு ஒரு சாதகமான விளைவு அல்லது வெகுமதி உள்ளது என்பதை இது குறிக்கிறது. இது மனத்தாழ்மை, திறந்த மனது மற்றும் கீழ்ப்படிதலுக்கான அழைப்பு. ஞானத்தின் வழிகளை கடைப்பிடிப்பது என்பது - கீழ்படிதலையும், ஞானம் குறிக்கின்றக் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகளுடன் இணைந்து வாழ்வதையும் குறிப்பிடுகிறது. இது கீழ்படிதல் ஆசீர்வாதங்களைத் தரும், மாறாக கீழ்படியாமை சாபங்களை ஏற்படுத்தும் என்ற பரந்த பைபிள் கருத்தை ஒலிக்கிறது. இன்றைய வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி மனத்தாழ்மை, கீழ்ப்படிதல் மற்றும் உத்தமம் நிறைந்த வாழ்க்கையைத் தழுவி, ஞானத்தின் போதனைகளைக் கேட்பது மட்டுமல்லாமல், அவற்றின்படி செயல்படவும் நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? மத்தேயு 7:24 சொல்லுகிறது: “ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 020 - True Repentance Comes from the Heart"

"Blog Y2 093 - Trust God, let go, live now"

Blog # 355 - "Praise God for His Spiritual Blessings"

"Blog Y2 052 - Living by God's Word daily"