And let the peace of God rule in your hearts, to which also you were called in one body; and be thankful. Colossians 3:15.
Each day, we must allow God’s peace to rule in our hearts. God promises us His peace, and as we focus on Him and not on ourselves, His peace becomes a constant reality. This peace is something all believers are called to experience, both individually and together, as the body of Christ. However, this peace can be blocked when our hearts are not thankful or filled with praise. A heart full of gratitude and praise prepares us to receive Christ’s peace and share it with others. The verse also reminds us of the need for unity in the body of Christ, where believers are called to work together in love and harmony. Philippians 4:7 says: “And the peace of God, which surpasses all understanding, will guard your hearts and minds through Christ Jesus.”
Reflection: Am I allowing God’s peace to truly rule in my heart each day? Am I fostering gratitude and unity with others as part of the body of Christ?
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கொலோசெயர் 3:15.
ஒவ்வொரு நாளும், தேவனுடைய சமாதானம் நம் இதயங்களில் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். தேவன் நமக்கு தனது சமாதானத்தை வாக்களித்திருக்கிறார், நாம் நம்மில் அல்ல, அவரில் கவனம் செலுத்தும்போது, அவருடைய சமாதானம் ஒரு நிலையான உண்மையாகிறது. இந்த சமாதானத்தை எல்லா விசுவாசிகளும் தனிப்பட்ட முறையிலும், ஒன்றாகவும் கிறிஸ்துவின் சரீரமாக அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள். இருப்பினும், நம் இதயங்கள் நன்றி செலுத்தாதபோது அல்லது துதிகளால் நிரப்பப்படாதபோது இந்த சமாதானம் இல்லாமல் ஆகும். நன்றியுணர்வும் துதியும் நிறைந்த இருதயம் கிறிஸ்துவின் சமாதானத்தைப் பெறவும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நம்மை ஆயத்தப்படுத்துகிறது. கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையில் ஒற்றுமையின் அவசியத்தையும் இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது, அங்கு விசுவாசிகள் அன்பிலும் நல்லிணக்கத்திலும் ஒன்றிணைந்து செயல்பட அழைக்கப்படுகிறார்கள். பிலிப்பியர் 4:7 சொல்லுகிறது: “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”
சிந்திக்க: ஒவ்வொரு நாளும் தேவ சமாதானம் என் இதயத்தில் உண்மையிலேயே ஆண்டுகொள்ள நான் அனுமதிக்கிறேனா? கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையின் ஒரு அவயவமாக மற்றவர்களுடன் உள்ளான அன்பையும் ஒற்றுமையையும் நான் வளர்க்கிறேனா?
Comments
Post a Comment