"Those who follow the word of God are happy and blessed"

Where there is no revelation, the people cast off restraint, But happy is he who keeps the law. Proverbs 29:18.

King Solomon speaks of the power of God's word in this verse. He emphasizes that where there is no revelation of the word of God, the people perish, but those who follow the word of God are happy and blessed. Many read the WORD but fail to meditate on it and follow its guidance. This neglect can lead us to destruction. Today, many people perish because they lack a prophetic vision to understand what God is doing in this world. Those without the revelation of God's word have no insight into their future or their direction in life. However, those who possess this revelation live in peace as they understand the mind of God through His word. In Psalm 119:2, King David says, "Blessed are those who keep His testimonies, Who seek Him with the whole heart!"


தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். நீதிமொழிகள் 29:18 சாலொமோன் ராஜா இந்த வசனத்தில் தேவனுடைய வார்த்தையின் வல்லமையைக் குறித்து பேசுகிறார். தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடு இல்லாத இடத்தில், மக்கள் அழிந்து போகிறார்கள், ஆனால் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுபவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர் வலியுறுத்துகிறார். நம்மில் பலர் வார்த்தையைப் படிக்கிறோம், ஆனால் அதைத் தியானித்து அதன் வழிகாட்டுதலைப் பின்பற்றத் தவறுகிறோம். இந்தப் புறக்கணிப்பு நம்மை அழிவுக்கு இட்டுச் செல்லும். இன்று, தேவன் இவ்வுலகில் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும் தீர்க்கதரிசன கண்ணோக்கம் இல்லாததால் பலர் அழிந்து போகிறார்கள். தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடு இல்லாதவர்களுக்கு அவர்களின் எதிர்காலம் அல்லது வாழ்க்கை எதை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது என்று அறியும் நுண்ணறிவு இல்லை. ஆனால், இந்த வெளிப்பாட்டைக் கொண்டவர்கள், தேவனுடைய வார்த்தையின் மூலம் அவருடைய மனதைப் புரிந்து வாழ்வதால், நிம்மதியாக வாழ்கிறார்கள். சங்கீதம் 119:2 -ல், தாவீது ராஜா, “அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.” என்று கூறுகிறார்.



Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"