"Transformation through affliction"

Before I was afflicted I went astray, But now I keep Your word. Psalm 119:6.7

Today's scripture reflects on David's past and present life. Once afflicted, he has now spiritually grown. David endured suffering at some point in his life and even strayed from God's ways. However, later he has turned away from his old lifestyle and embraced following God's ways. He now puts into practice what he has learned about God. Affliction or suffering not only leads us through challenging moments but also transforms us, deepening our commitment to following God's commandments. That is why David acknowledges that afflictions were allowed for his good, enabling him to learn God's law. The spiritual growth he is experiencing now is the result of what he has gone through in his life. God allows every struggle for our good, not to harm us, but to build us up. "It is good for me that I have been afflicted, that I may learn Your statutes." Psalm 119:71.

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். சங்கீதம் 119:67.

இன்றைய வேத வசனம் தாவீதின் கடந்த கால மற்றும் நிகழ்கால வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. ஒருமுறை துன்புறுத்தப்பட்ட அவர் இப்போது ஆவிக்குரிய ரீதியில் வளர்ந்துள்ளார். தாவீது தன் வாழ்வில் சில சமயங்களில் துன்பங்களைச் சகித்தார், தேவனுடைய வழிகளிலிருந்தும் விலகிச் சென்றார். இருப்பினும், பின்னர் அவர் தனது பழைய வாழ்க்கை முறையை விட்டு விலகி தேவனின் வழிகளைப் பின்பற்றினார். தேவனைப் பற்றி அறிந்து கொண்டதை இப்போது நடைமுறைப்படுத்துகிறார். துன்பங்கள் அல்லது வருத்தங்கள் நம்மை சோதனைகளில் வழிநடத்துவது மட்டுமல்லாமல், தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கான நமது விசுவாசத்தை  ஆழமாக்குகிறது. அதனால்தான், தன் நன்மைக்காகவே துன்பங்கள் அனுமதிக்கப்பட்டன என்று தாவீது ஒப்புக்கொண்டு, அவைகள் தேவனுடைய பிரமாணங்களை கற்றுக்கொள்ள உதவியது எனகிறார். இப்போது அவர் அனுபவிக்கும் ஆவிக்குரிய வளர்ச்சி அவர் வாழ்க்கையில் கடந்து வந்த அனுபவங்களின்   விளைவேயாகும். தேவன், ஒவ்வொரு போராட்டத்தையும் நம் நன்மைக்காகவே அனுமதிக்கிறார், அவைகள் தீமைக்கல்ல ஆனால் நம்மைக் கட்டியெழுப்பவே."நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." சங்கீதம் 119:71. 


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"