"Blog Y2 052 - Living by God's Word daily"

Be doers of the word, and not hearers only, deceiving yourselves. James 1:22.

Apostle James emphasizes the need to act on what we hear. He warns that we deceive ourselves if we think we can be hearers only and not doers of the Word. Those who sincerely love God are the ones who keep His commands. God desires that those who hear His Word become authentic followers of Jesus—disciples who obey the Lord’s teachings out of love for their Heavenly Father. Jesus also gave a stern warning to those who hear God's words but fail to act on them in Matthew 7:21,  "Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but only the one who does the will of my Father in heaven."  As faith without works is dead, merely hearing God's Word without putting it into practice also deadens our spiritual life. The cleansing and justifying power of God's Word is experienced only when we live according to it. Are you living as both a hearer and doer of God's Word? Romans 2:13 says: “For not the hearers of the law are just in the sight of God, but the doers of the law will be justified.”

நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு 1:22.

நாம் கேட்பவற்றின்படி செயல்பட வேண்டியதன் அவசியத்தை அப்போஸ்தலனாகிய  யாக்கோபு வலியுறுத்துகிறார். நாம் தேவனுடைய  வார்த்தையை கேட்பவர்களாக மட்டுமே இருந்து, செய்யாதவர்களாக இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது என்று எச்சரிக்கிறார். தேவனை உண்மையாக நேசிக்கிறவர்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள். அவருடைய வார்த்தையைக் கேட்பவர்கள் இயேசுவின் உண்மையான சீடர்களாக மாற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் - சீஷர்கள், தங்கள் பரலோக பிதா மீதுள்ள அன்பினால் கர்த்தரின் போதனைகளுக்குக் கீழ்ப்படிபவர்கள். தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செய்யத் தவறுகிறவர்களுக்கு இயேசு ஒரு கண்டிப்பான எச்சரிக்கையை மத்தேயு 7:21-ல் கொடுத்திருக்கிறார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."  கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருப்பதுபோல, தேவனுடைய வார்த்தையை நடைமுறையில் செயல்படுத்தாமல் வெறுமனே கேட்பது நமது ஆவிக்குரிய வாழ்க்கையையும் அழித்துவிடும். தேவனுடைய வார்த்தையின் சுத்திகரிப்பு மற்றும் தேவநீதி, நாம் அதன்படி வாழும்போது மட்டுமே அனுபவிக்கப்படுகிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்பவர்களாகவும் செய்கிறவர்களாகவும் வாழ்கிறீர்களா? ரோமர் 2:13 கூறுகிறது: “நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"