Blog # 320 - "Jesus helps us overcome temptation"
For in that He Himself has suffered, being tempted, He is able to aid those who are tempted. Hebrews 2:18.
This verse speaks of Jesus' victory over temptation. Jesus experienced our humanity, suffering, and temptation while He was in this world. He knows our pain, sorrows, anxieties, trials, and tribulations. He has overcome death and conquered the grave. When we call on Him and share our problems, He understands and answers us. He is able to help those who are being tempted in all circumstances. He will help us whenever we need to overcome the temptations we face. By relying on His Word and allowing our minds to be transformed, we, too, can overcome temptation. Shall we rely on Jesus to help us overcome every temptation we face? Romans 12:2 says, “And do not be conformed to this world, but be transformed by the renewing of your mind, that you may prove what is that good and acceptable and perfect will of God.”
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரெயர் 2:18.
இந்த வசனம் இயேசுவின் சோதனையின் மீதான வெற்றியைப் பற்றி பேசுகிறது. இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது நமது மனிதத்துவத்தையும், பாடுகளையும், சோதனையையும் அனுபவித்தார். அவர் நமது வலி, துக்கம், கவலை, சோதனை மற்றும் கஷ்டங்களை அறிந்து இருக்கிறார். அவர் மரணத்தை ஜெயித்து, கல்லறையை வென்றார். நமது பிரச்சனைகளை நாம் அவரிடம் சமர்ப்பிக்கும்போது, அவர் நம்மைப் புரிந்துகொண்டு பதிலளிக்கிறார். எல்லா சூழ்நிலைகளிலும் சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவர் உதவ வல்லவராயிருக்கிறார். நாம் சந்திக்கும் சோதனைகளைச் சமாளிக்க எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர் நமக்கு உதவுவார். அவருடைய வார்த்தையை நம்புவதன் மூலமும், நம் மனதை மாற்ற அனுமதிப்பதன் மூலமும், நாமும் சோதனையை மேற்கொள்ள முடியும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனையையும் சமாளிக்க இயேசுவை நம்பியிருப்போமா? ரோமர் 12:2 சொல்லுகிறது, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”
Comments
Post a Comment