"Blog Y2 016 - Wise Counsel Leads to Success"

Plans are established by counsel; By wise counsel wage war. Proverbs 20:18.

Today's verse says that plans are established by seeking advice. Good advice is essential for sound decision-making, and it should come from wise counselors. Without counsel, plans fail, but with many advisers, we will succeed. The Bible mentions kings who, by listening to wise people like Joseph and Daniel, were able to save their nations. God has given us the ability to learn and grow from one another. We gain wisdom by listening to others.  Seeking advice requires humility—it means admitting that we do not know everything and that others may have valuable insights. When seeking advice, it is important to seek godly counsel that aligns with God's Word and His will. This will help us make wise decisions. Are you seeking godly counsel and wise advice before making important decisions? Proverbs 24:6 says: "For by wise counsel you will wage your own war, And in a multitude of counselors there is safety."

ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு. நீதிமொழிகள் 20:18.

ஆலோசனை பெறுவதன் மூலம் திட்டங்கள் நல்ல முறையில் செய்யப்படுகின்றன என்று இன்றைய வசனம் கூறுகிறது. நல்ல ஆலோசனை, சிறந்த முடிவுகளை எடுக்க மிகவும் முக்கியமானது, மேலும் அது ஞானமுள்ள ஆலோசகர்களிடமிருந்து வர வேண்டும். ஆலோசனை இல்லாமல், திட்டங்கள் தோல்வியடைகின்றன, ஆனால் பல ஆலோசகர்கள் வெற்றி வாய்ப்பைப் பெறச்செய்வர். யோசேப்பு, தானியேல் போன்ற ஞானிகள் சொன்னதைக் கேட்டு ராஜாக்கள் தங்கள் தேசங்களைக் காப்பாற்றினார்கள் என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது. ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளவும், வளரவும் தேவன் நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதன் மூலம் நாம் ஞானத்தைப் பெறுகிறோம். ஆலோசனை கேட்பதற்கு மனத்தாழ்மை தேவை - நமக்கு எல்லாம் தெரியாது என்றும், மற்றவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு இருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் ஆலோசனையைத் தேடும்போது, தேவ பக்தியுள்ளவர்களிடம்  ஆலோசனையை நாடுவது முக்கியம் - அது தேவனுடைய வார்த்தையுடனும் அவருடைய சித்தத்துடனும் ஒத்துப்போகும்.  இது நமக்கு புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவும். நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்குமுன் தெய்வீக ஆலோசனையும் ஞானமான அறிவுரைகளையும் தேடுகிறீர்களா? நீதிமொழிகள் 24:6 கூறுகிறது: "நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்."

Comments

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"