"Blog Y2 076 - True happiness comes from God."
Happy is he who has the God of Jacob for his help, Whose hope is in the Lord his God. Psalm 146:5.
The psalmist declares that true happiness comes from having the God of Jacob as one's help and placing one's hope in the Lord. This shows that joy and contentment are found in the relationship with God, who provides strength, guidance, and salvation to those who seek Him. This echoes the teachings of Jesus in the New Testament, who urged his followers to seek the kingdom of God and trust in His provision for their needs. In a world where people often seek happiness through material possessions, personal achievements, or relationships, the psalmist presents an alternative understanding of happiness rooted in spiritual truths. It is a call today for us to put our trust in God as the ultimate source of help and to find fulfillment in Him. Are you relying on God's promises and trusting Him completely for true peace and joy? Romans 15:13 says: "Now may the God of hope fill you with all joy and peace in believing, that you may abound in hope by the power of the Holy Spirit."
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். சங்கீதம் 146:5.
யாக்கோபின் தேவனை ஒருவர் துணையாகக் கொண்டிருப்பதாலும், அந்த தேவனாகிய கர்த்தரில் நம்பிக்கை வைப்பதாலும் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்று சங்கீதக்காரன் அறிவிக்கிறார். தேவனைத் தேடுகிறவர்களுக்கு பெலனையும், வழிகாட்டுதலையும், இரட்சிப்பையும் அளிக்கிற தேவனுடனான உறவில் மகிழ்ச்சியும் மனநிறைவும் காணப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. இது புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் போதனைகளை எதிரொலிக்கிறது, அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை தேவனுடைய ராஜ்யத்தைத் தேடவும், அவர்களின் தேவைகளுக்கு தேவனுடைய வழிநடத்துதலில் நம்பிக்கை வைக்கவும் வலியுறுத்தினார். இந்த உலகில் மக்கள் பலருக்கு பொருளாதாரம், சொத்துக்கள், தனிப்பட்ட சாதனைகள், அல்லது உறவுகள் மூலமாக மகிழ்ச்சியைத் தேடுவது வழக்கமாக இருக்கும் நிலையில், சங்கீதக்காரர் ஒரு மாற்று கருத்தை முன்வைக்கிறார். இந்த மகிழ்ச்சி ஆன்மீக சத்தியங்களில் நிலையானதென்பதை எடுத்துக்காட்டுகிறார். இன்று, நாம் நம் உன்னதமான தேவனை உதவியாகவும், நம்பிக்கையாகவும் வைத்து முழு நிறைவைப் பெறுவதற்கு இது ஒரு அழைப்பாகவும் இருக்கிறது. நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி, உண்மையான சமாதானம் மற்றும் சந்தோஷத்திற்காக அவரை முழுமையாக நம்புகிறீர்களா? ரோமர் 15:13 சொல்லுகிறது: “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.”
Comments
Post a Comment