"Blog Y2 084 - Finding Favor Through Submission."

“Do not be afraid, Mary, for you have found favor with God. Luke 1:30.

Today's verse highlights divine favor and grace in the angel Gabriel's visit to Mary. This moment emphasizes Mary's pivotal role in the birth of Jesus Christ and God's redemptive plan. The angel Gabriel greets Mary with the words "Do not be afraid," a phrase often used by angels in the Bible to offer reassurance and prepare people for important messages. Mary's favor with God reflects His grace, while her humble submission demonstrates faith and obedience. God is reminding us today not to be afraid of anything. When we submit ourselves to Him, we, too, find favor with God, just as Mary did. How willing are you to humbly submit and obey God's plan for your life, even when it seems challenging or uncertain? Isaiah 41:10 says: "Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand."

மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். லூக்கா 1:30.

இன்றைய வசனம் காபிரியேல் தூதன் மரியாவை சந்தித்ததில் தேவனின் தயவையும் கிருபையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த தருணம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் தேவனின் மீட்புத் திட்டத்திலும் மரியாளின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. "பயப்படாதே" என்ற வார்த்தைகளைச் சொல்லி காபிரியேல் தூதன் மரியாளை வாழ்த்துகிறார், இது வேதாகமத்தில் தூதர்கள் முக்கிய செய்திகளை தெரிவிக்கும்போது தாராளமாக பயன்படுத்திய ஒரு வாக்கியம். மரியாளிடம் தேவனின் தயவு,  அவரது கிருபையை பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அவளுடைய தாழ்மையான சமர்ப்பிப்பு, விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் நிரூபிக்கிறது. எதற்கும் பயப்பட வேண்டாம் என்று தேவன் இன்று நமக்கு நினைவூட்டுகிறார். நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கும்போது, மரியாளைப் போலவே நாமும் தேவனிடத்தில் தயவைப்  பெறுவோம். உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டம் சவாலானதாகவோ அல்லது நிச்சயமற்றதாகவோ தோன்றினாலும், தேவனிடம்  மனத்தாழ்மையுடன் உங்களை ஒப்படைத்து  கீழ்ப்படிய நீங்கள் எவ்வளவு மனமுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? ஏசாயா 41:10 சொல்லுகிறது: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”



 

Comments

Search This Blog

Popular posts from this blog

Blog # Y2 001 - "Praise Deepens Our Relationship with God"

"Blog Y2 042 - Good News Refreshes the Weary Soul"

Blog # 327 - "Confidently Wait for the Lord's Timing"

Blog # Y2 004 - "Compassion and Purity Reflect True Faith"

"Blog Y2 014 - God Answers Our Prayers Before We Ask"

Blog # 340 - "Living God's Love Through Actions"

"God desires intimate relationship with contrite."