God created everyone of us in His own image to truly praise Him with all our heart. God wants to be glorified at all times. He wants us to know and worship Him for who He was, He is and is to come. In prophet Isaiah’s great vision, he saw the Lord seated on the throne as a sovereign ruler of the universe. Isaiah’s initial response was brokenness and he couldn't praise God. Even Though he was a great holy prophet outwardly, but inside of him he couldn't see God as he needed more holiness. He could worship God only after surrendering his life to God. Same way today in our lives we need holiness to worship Him. To be holy, we need to be sanctified through the blood of Jesus Christ. According to today's verse, when we become holy, with a grateful heart we can sing praises of remembering His goodness, holiness and righteousness. As the Psalmist sang, we can 'Give unto the Lord the glory due to His name; and Worship the Lord in the beauty of holiness.'
Sing unto the LORD, O ye saints of his, and give thanks at the remembrance of his holiness. Psalm 30:4
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
சங்கீதம் 30:4
உண்மையிலேயே நாம் முழு மனதுடன் கடவுளைத் துதிப்பதற்காகவே நம் ஒவ்வொருவரையும் அவர் தம் சாயலில் படைத்தார். கடவுள் எல்லா நேரங்களிலும் மகிமைப்பட விரும்புகிறார். நாம் கடவுளை அவர் யாராக இருந்தார், இருக்கிறார் மற்றும் வரப்போகிறார் என்பதை அறிந்து வணங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஏசாயா தீர்க்கத்தரிசியின் தரிசனத்தில், தேவன் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். தரிசனத்தை கண்ட ஏசாயாவின் ஆரம்பத்தில் மனமுறிவின் நிமித்தம் அவரால் கடவுளைத் துதிக்க முடியவில்லை. அவர் வெளிப்புறமாக ஒரு பெரிய பரிசுத்த தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவருக்குள் கடவுளைக் காண முடியவில்லை, ஏனெனில் அவருக்கு அதிக பரிசுத்தம் தேவைப்பட்டது. தன் வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைத்த பின்னரே கடவுளை ஆராதிக்க முடிந்தது. அதேபோல இன்றும் நம் வாழ்வில் அவரை ஆராதிக்க நமக்குப் பரிசுத்தம் தேவை. பரிசுத்தமாக இருக்க, நாம் இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்பட வேண்டும். இன்றைய வசனத்தின்படி, நாம் பரிசுத்தமாகும்போது, நன்றியுள்ள இதயத்துடன் அவருடைய நன்மை, பரிசுத்தம் மற்றும் நீதியை நினைத்துப் புகழ்ந்து பாடலாம். சங்கீதக்காரனாகிய தாவீது பாடியது போல், 'கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுது கொள்ளுங்கள்.'
Comments
Post a Comment