In everyday life, we experience the pain of brokenness and are full of regret. In today's verse, we understand that God is near to those with the heart filled with hurt, grief, guilt, shame, and He saves the crushed spirit. But the Bible says that only God can heal the broken hearts and bind up their wounds. Jesus is the great example for us; He went through the pain in the garden of Gethsemane and shed every drop of blood on the cross to save our lives from the pain of brokenness. He can understand whatever we go through. If we humble ourselves and repent to Him with a broken heart, He will heal our brokenness and fill us with the joy of salvation. As the prophet Jeremiah prayed, let us pray, "Heal me, Lord, and I will be healed; save me, and I will be saved, for you are the one I praise."
The LORD is near to those who have a broken heart, And saves such as have a contrite spirit. Psalm 34:18
நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 34:18
அன்றாட வாழ்க்கையில், நாம் இருதயம் நொறுங்குண்டு வேதனையை அனுபவிக்கிறோம், முழுவதும் வருத்தப்படுகிறோம். இன்றைய வசனத்தில், கடவுள் காயம், துக்கம், குற்ற உணர்வு, அவமானம் ஆகியவற்றால் நிறைந்த இதயம் கொண்டவர்களுக்கு அருகில் இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம், மேலும் அவர் நொறுங்குண்ட ஆவியைக் காப்பாற்றுகிறார். ஆனால், உடைந்த இதயங்களைக் குணப்படுத்தவும், அவர்களின் காயங்களைக் கட்டவும் கடவுளால் மட்டுமே முடியும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. இயேசுவே நமக்கு சிறந்த முன்மாதிரி; அவர் கெத்செமனே தோட்டத்தில், நொறுங்குண்ட இதய வேதனையிலிருந்து நம் உயிரைக் காப்பாற்ற சிலுவையில் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் சிந்தினார். நாம் எந்த நிலையிலிருக் கிறோமென்று அவரால் புரிந்து கொள்ள முடியும். நாம் நம்மைத் தாழ்த்தி, உடைந்த இதயத்துடன் அவரிடம் மனந்திரும்பினால், அவர் நம் உடைந்த வாழ்க்கைய குணப்படுத்தி, இரட்சிப்பின் சந்தோஷத்தால் நம்மை நிரப்புவார். எரேமியா தீர்க்கதரிசி ஜெபித்தபடி, "கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன், என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன், தேவரீரே என் துதி." என்று ஜெபிப்போம்.
Comments
Post a Comment