Today's word says that salvation is a gift of God and not something we can achieve on our own. We have been saved through faith by grace. No action of ours is good enough to earn our salvation. Jesus Christ willingly sacrificed Himself on the Cross to save us from our sins. Jesus is the gift, freely given to anyone who believes in Him. Those who believe Him will get peace and joy in their hearts that no one else can provide. Let us echo the words of David saying, "Restore to me the joy of Your salvation, And uphold me by Your generous Spirit."
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. எபேசியர் 2:8
இன்றைய வார்த்தை இரட்சிப்பு என்பது நமக்கு கடவுளின் பரிசாகும், நாம் சொந்தமாக அடையக்கூடிய ஒன்று அல்ல என்று கூறுகிறது. கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். நம்முடைய எந்தச் செயலும் நமது இரட்சிப்பைப் பெறுவதற்கு போதுமானதாக இல்லை. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு கிறிஸ்து தன்னை மனமுவந்து சிலுவையில் தியாகம் செய்தார். இயேசு, அவரை நம்பும் எவருக்கும் இலவசமாக வழங்கப்படும் பரிசு. அவரை நம்புபவர்கள் தங்கள் இதயங்களில் யாராலும் கொடுக்க முடியாத அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுவார்கள். "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்." என்ற தாவீதின் வார்த்தைகளை நாம் மறுபடியும் சொல்லுவோம்.
Comments
Post a Comment