"The Lord is my Helper"
My help comes from the Lord, Who made heaven and earth. Psalm 121:2
In every one of our lives, there are situations that go beyond our control. At that time, we turn to God for help. Today’s verse says that our help comes from the Maker of heaven and earth. He gave His only son, Jesus, to redeem our lives from sin, addiction, depression, sickness, weakness, sorrow, pain, emotional hurt, mental health issues, and bondages. If we trust Him, He is there to help us, heal us, provide for us, and protect us. He will never leave us nor forsake us. Let us pray with David, "Hear, O Lord, and be merciful to me! O Lord, be my helper."
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் ஏற்படும். அந்த நேரத்தில், உதவிக்காக கடவுளிடம் திரும்புவோம். நமது உதவி வானத்தையும் பூமியையும் படைத்தவரிடமிருந்தே வருகிறது என்று இன்றைய வசனம் கூறுகிறது. தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை, நம்முடைய பாவம், அடிமைத்தனம், மனச்சோர்வு, நோய், பலவீனம், துக்கம், வலி, உள்ளான உணர்வுகளின் காயம், மனநலப் பிரச்சினைகள் மற்றும் அடிமைத்தனங்களிலிருந்து மீட்டெடுக்க மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நாம் அவரை நம்பினால், அவர் நமக்கு உதவவும், குணப்படுத்தவும், தேவைகளை கொடுக்கவும், நம்மைப் பாதுகாக்கவும் இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. நாம் தாவீதுடன் சேர்ந்து ஜெபிப்போம், "கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும், கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும்."
Comments
Post a Comment