"God Our Keeper"
The Lord is your keeper; The Lord is your shade at your right hand. Psalm 121:5
In our lives, we often face various challenges, uncertainties, and fears. Today's verse serves as a reminder that God watches over us and stands beside us as our protective shade. He protects us from the heat of the day and guards us against the attacks of our enemies. When we seek God and place our faith in Him, He becomes our shield, fortress, and strong tower. With God at our right side, we remain unshaken. We can relate to what King David said, "I have set the LORD always before me. Because He is at my right hand, I will not be shaken."
கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். சங்கீதம் 121:5
நம் வாழ்க்கையில், நாம் அடிக்கடி பல்வேறு சவால்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பயம் போன்றவற்றை சந்திக்கிறோம். இன்றைய வசனம், கடவுள் நம்மைக் கண்காணித்து, நமக்குப் பாதுகாப்பு நிழலாக நம் அருகில் நிற்கிறார் என்பதை நினைவூட்டுகிறது. பகலின் வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நம்மைக் காக்கிறார். நாம் தேவனைத் தேடி, அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்குக் கேடயமாகவும், கோட்டையாகவும், பாதுகாப்பு கொடுக்கும் கோபுரமாகவும் மாறுகிறார். கர்த்தர் நம் வலது பக்கத்தில் இருப்பதால், நாம் அசைக்கப்படாமல் இருக்கிறோம். தாவீது ராஜா சொன்னதை நாம் தொடர்புபடுத்தலாம், "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை."
Comments
Post a Comment