“Behold, God, my salvation! I will trust and not be afraid, For the LORD GOD is my strength and song; Yes, He has become my salvation.” Isaiah 12:2.
In today's world, we all go through fearful and unstable situations in our lives. Sometimes, those moments occur when we’re worried about our families or friends; at other times, we may be concerned about our careers or work-related problems. There may also be times when our health declines or something accidental occurs in our lives. But today, God's word says that we should trust Him and not be afraid of anything. His words are truthful; He is our salvation, our strength, and our song. He gave His life to give us the gift of Salvation. Let us focus on the goodness of God and choose to let Him be our strength. Isaiah 41:10 says, "Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand."
தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். ஏசாயா 12:2.
இன்றைய உலகில், நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் பயமான மற்றும் நிலையற்ற சூழ்நிலைகளை கடந்து செல்கிறோம். சில நேரங்களில், நம் குடும்பங்கள் அல்லது நண்பர்களைப் பற்றி கவலைப்படும்போது அந்த தருணங்கள் நிகழ்கின்றன; மற்ற நேரங்களில், நம்முடைய தொழில் அல்லது வேலை தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி நாம் கவலைப்படலாம். நம் உடல்நலம் குறையும் நேரங்கள் அல்லது நம் வாழ்வில் தற்செயலாக ஏதாவது நிகழலாம். ஆனால், நாம் தேவனை நம்ப வேண்டும், எதற்கும் பயப்படக்கூடாது என்று, இன்றய தேவனுடைய வார்த்தை கூறுகிறது. அவரது வார்த்தைகள் உண்மையானவை; அவரே நமது இரட்சிப்பு, நமது பெலன், நமது பாடல். நமக்கு இரட்சிப்பின் பரிசை கொடுக்க அவர் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். தேவனிடம் உள்ள நன்மையான காரியங்களில் கவனம் செலுத்தி, அவரை நமது பெலனாக வைத்துக்கொள்வோம். ஏசாயா 41:10 சொல்லுகிறது, "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்."
Amen!
ReplyDelete