"Walk in His Ways"
The wicked one shall no more pass through you; He is utterly cut off. Nahum 1:15
துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்து வருவதில்லை. அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான். நாகூம் 1:15
இன்றைய வசனம், தேவன் தம்முடைய ஜனங்களுக்காக ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்றும், அவர்களை ஒடுக்குபவர்களை ஒடுக்க அனுமதிக்க மாட்டார் என்றும் கூறுகிறது. அன்றாட வாழ்க்கையில், மக்கள் எப்போதும் நம்மைக் குறித்து முறுமுறுக்கிறார்கள், சிறிய விஷயங்களுக்கு கூட நம்மை பரிகாசம் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நாம் கஷ்டப்படும்போது நமக்கு உதவுவார்கள், ஆனால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டு நல்லது செய்யும் போது அவர்கள் பொறாமைப்படுகிறார்கள். அவர்கள் நம்மை கீழே இழுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் நாம் தேவனைப் பின்பற்றி, அவருடைய வழிகளில் நடந்தால், பொல்லாதவர்கள் இனி ஒருபோதும் நம் வழியே வரமாட்டார்கள், ஆனால் தேவன் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவார் என்று கடவுளின் வார்த்தை கூறுகிறது. "கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார், துன்மார்க்கரின் வழியோ அழியும்." (சங்கீதம் 1:6), என்று தாவீது ராஜாவோடு சேர்ந்து நாமும் சொல்லுவோம்.
Comments
Post a Comment