"Faithful prayer heals the sick"

The prayer of faith will save the sick, and the Lord will raise him up. And if he has committed sins, he will be forgiven. James 5:15.

This verse focuses on the power of faith in prayer. In the Bible, in Matthew 8:5-13, as Jesus enters Capernaum, a Roman officer known as a 'centurion' begs him to heal his servant. Jesus offers to go to his house, but the centurion says that he is unworthy and asks Jesus to say a word, believing that his servant will be healed. He understands the power of Jesus' words and authority. His servant received healing immediately. Jesus has the power not only to heal but also to forgive us our sins. We must have faith to receive any blessings from Him.  In Hebrews 11:6, the writer of Hebrews says, "But without faith it is impossible to please Him, for he who comes to God must believe that He is, and that He is a rewarder of those who diligently seek Him."

விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். யாக்கோபு 5:15.

இந்த வசனம் விசுவாசமுள்ள ஜெபத்தின் வல்லமையை  நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. பைபிளில், மத்தேயு 8:5-13 -ல், இயேசு கப்பர்நகூமிற்குள் நுழையும் போது, ​​'நூற்றுக்கு அதிபதி' என்று அழைக்கப்படும் ஒரு ரோமானிய அதிகாரி தனது வேலைக்காரனைக் குணப்படுத்தும்படி வேண்டிக்கொள்கிறான். இயேசு அவனது வீட்டிற்குச் செல்ல முன்வருகிறார், ஆனால் நூற்க்கு  அதிபதி, “ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.” என்று  இயேசுவிடம் கேட்கிறான் . இயேசுவின் வார்த்தைகள் மற்றும் வல்லமையை அவன்  தெரிந்திருந்தான். அந்த நேரத்திலேயே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். சுகப்படுத்துவது மட்டுமல்ல, நம்முடைய பாவங்களையும்  மன்னிக்கும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. அவரிடமிருந்து எந்த ஆசீர்வாதத்தையும் பெற நமக்கு விசுவாசம் இருக்க வேண்டும். எபிரேயர் 11:6 -ல்,  எபிரேயரை எழுதியவர் கூறுகிறார், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”

 

Comments

  1. Power of Intercessory prayer. Thanks to the lord for all those prayer for us and the ones whom we are blessed with the opportunity to pray for.

    ReplyDelete
    Replies
    1. Thanks Rachael for your comments. You both have blessed days.

      Delete

Post a Comment

Search This Blog

Popular posts from this blog

"Do not hold on to anger."

"Blog Y2 086 - Calm Words, Peaceful Hearts"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

Blog # 342 - "Trust in God's help and protection"

Blog # Y2 012 - "Prepare Your Heart for Worship"

"Believers, you have overcome the world."

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"