"Cast your burdens upon God."

Cast your burden on the Lord, And He shall sustain you. Psalm 55:22.

This is a great promise today for us. To "cast your burden" means to fully entrust it to God rather than trying to carry it for ourselves. Whatever the situation may be, God is more capable than any human being ever could be. David understood that very much. So he releases all his worries and fears into the care of the Lord, who takes on that burden. The first thing we need to know is who our God is and His strength; second, we should have faith on Him; third, we submit all to Him as it is not worrying about anything. When we do this, our fear, worries, sorrow, and doubts will leave us, and we will not be moved at any cost. We will rejoice in Him more as He is taking care of us. Proverbs 16:3 says, "Commit your works to the Lord, And your thoughts will be established."

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். சங்கீதம் 55:22.

இன்று நமக்கு இது, ஒரு பெரிய வாக்குத்தத்தம். "உன்  பாரத்தை வைத்துவிடு" என்பது அதை நாம் சுமப்பதற்குப் பதிலாக அதை தேவனிடம் முழுமையாக ஒப்படைப்பதைக் குறிக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், எந்த மனிதனையும் விட தேவன் அதிக வல்லமை உள்ளவராக இருக்கிறார். தாவீது அதை மிகவும் புரிந்து கொண்டார். எனவே தாவீது பாரத்தை ஏற்றுக்கொள்கிற தேவனிடம்  தனது கவலைகள் மற்றும் பயங்கள் அனைத்தையும் அவரின் கவனிப்பில் விடுகிறான். நாம் முதலில் நமது தேவன் யார் என்பதையும், அவருடைய பெலனையும் தெரிந்து கொள்ள வேண்டும்; இரண்டாவதாக, நாம் அவர்மேல் விசுவாசம் வைக்க வேண்டும்; மூன்றாவதாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அனைத்தையும் அவரிடத்தில் சமர்ப்பிக்கவேண்டும். இதைச் செய்யும்போது, நம்முடைய பயம், கவலைகள், துக்கம் மற்றும் சந்தேகங்கள் நம்மை விட்டு விலகும், மேலும் நாம் எவ்விதத்திலும் அசைக்கப்பட மாட்டோம். அவர் நம்மை கவனித்துக்கொள்வதால் நாம் அவரில் அதிக மகிழ்ச்சியடைவோம். நீதிமொழிகள் 16:3 கூறுகிறது, “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.”

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"