"Fear Not, God Is with You"

Fear not, .. I will help you,” says the Lord. Isaiah 41:14.

It’s a wonderful promise for us not to be fearful. We should not be the people who are anxious, troubled, worried, or afraid about the things that threaten our lives and happiness. Here, God referred to the children of Israel as 'you worm Jacob' “so little, so weak, so despised, and trampled upon by everyone." It means that they were trampled by the other nations as easily as people would trample a worm. Today, our situation may be the same, hard-pressed and crushed from every direction. But God promises deliverance to us, protection from our enemies, and triumph in the end. Let us trust Him and be stronger in Him. Isaiah 41:10 says, "Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you; yes, I will help you, I will uphold you with My righteous right hand."

பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.ஏசாயா41:14.

நாம் பயப்பட வேண்டாம் என்பது ஒரு அற்புதமான வாக்குத்தத்தம். நம்முடைய வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் குலைக்கும் காரியங்களை நினைத்து ஏக்கமோ, கலக்கமோ, கவலையோ அல்லது பயமோ உள்ள ஆட்களாக நாம் இருக்கக்கூடாது. இங்கே, தேவன் இஸ்ரவேல் புத்திரரை 'யாக்கோபு என்னும் பூச்சியே' என்று குறிப்பிட்டார். மேலும் “மிகவும் சிறியவர்கள், மிகவும் பலவீனமானவர்கள், மிகவும் வெறுக்கப்பட்டவர்கள், அனைவராலும் மிதிக்கப்படுபவர்கள்”  என்றார். மக்கள் ஒரு புழுவை மிதிப்பதுபோல மற்ற தேசங்களால், அவர்கள் எளிதாக மிதிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். இன்று, நமது நிலைமை அதைப்போல இருக்கலாம், எல்லா திசைகளிலிருந்தும் கடினமாக அழுத்தப்பட்டு நசுக்கப்படலாம். ஆனால் தேவன் நமக்கு விடுதலையையும், நமது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பையும், இறுதியில் வெற்றியையும் வாக்களிக்கிறார். நாம் அவரை நம்பி அவரில் பலமுள்ளவர்களாக இருப்போம்.  ஏசாயா 41:10 சொல்லுகிறது, "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்."

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 094 - Live by the Golden Rule"

"Blog Y2 450 - Fear God, Find Life"

"Blog Y2 099 - Gratitude Unlocks God’s Peace"

"Blog Y2 095 - Seek God, Find Deliverance"

"Blog Y2 100 - Hope in God’s Faithful Plans"

"Blog Y2 097 - "Christ: Our Source of Wisdom"

"Blog Y2 449 - Salvation: Grace, Not Works"