"God is our help and hope."
Our soul waits for the Lord; He is our help and our shield. Psalm 33:20.
Many of us are living in this world with hopeless situations. We try to find our own solutions for the problems we face in our day-to-day lives. Finally, when everything fails, we turn to God. However, King David declares that God is our help, our hope, and our shield. Sometimes, our struggles may not have immediate solutions; in such cases, we should patiently wait for God's help. For example, chronic diseases such as heart disease, cancer, diabetes, stroke, and arthritis may worsen over time, but patiently waiting on God can lead to healing and strength to overcome. To experience this, we need to trust in God, understand His power and, above all, have patience to wait for His timing. Having a diverse understanding of who our God is helps us place our trust in Him and find rest even in the midst of hopelessness. Psalm 18:2 says, “The LORD is my rock and my fortress and my deliverer; My God, my strength, in whom I will trust; My shield and the horn of my salvation, my stronghold.”
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங்கீதம் 33:20.
நம்மில் பலர் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளுடன் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக் காண முயற்சிக்கிறோம். இறுதியாக, எல்லாம் தோல்வியடையும் போது, நாம் கடவுளிடம் திரும்புகிறோம். இருப்பினும், தேவன் நம்முடைய துணையும், நம்பிக்கையும், கேடகமாகவும் இருக்கிறார் என்று தாவீது ராஜா அறிவிக்கிறார். சில நேரங்களில் நமது போராட்டங்களுக்கு உடனடி தீர்வுகள் இல்லாமல் போகலாம்; அத்தகைய சந்தர்ப்பங்களில், தேவனுடைய உதவிக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். உதாரணமாக, இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மூட்டுவலி போன்ற நாட்பட்ட நோய்கள் காலப்போக்கில் மோசமடையக்கூடும், ஆனால் பொறுமையாக தேவனுக்காக காத்திருக்கும்போது குணமடைவதுடன், அதை மேற்கொள்ள பெலனும் கிடைக்கும். இதை அனுபவிக்க, நாம் தேவனை நம்ப வேண்டும், அவருடைய வல்லமையைப் புரிந்துகொள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். நம்முடைய தேவன் யார் என்பதைப் பற்றிய பலதரப்பட்ட புரிதல்கள் வைத்திருப்பது, அவர் மீது நமது நம்பிக்கையை வைக்கவும், நம்பிக்கையற்ற நிலையின் மத்தியிலும் ஆறுதல் அடையவும் உதவுகிறது. சங்கீதம் 18:2 சொல்லுகிறது, “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.”
Comments
Post a Comment