"David loved to worship God."
I was glad when they said to me, “Let us go into the house of the Lord.” Psalm 122:1.
King David loved to go into the house of the Lord to worship Him, as He had done great things in his life. Like David, we also need to go to church to worship Him with a grateful heart. Let us rejoice in the One who created us. Let us love Him, who loves us so much that He sent His Son to die for us and save us from a sinful life. Let us praise Him for the breath of life He gives us each day. Let us honor Him by simply sitting in awe of His presence. Let us serve Him by seeking His presence in our lives. We must confess that there have been times when we were not eager or enthusiastic about coming to the house of God. We must go to the house of God with a joyful heart to worship Him. Hebrews 10:25 says, "Not forsaking the assembling of ourselves together, as is the manner of some, but exhorting one another, and so much the more as you see the Day approaching."
கர்த்தர் தாவீது ராஜாவின் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்தபடியால், அவரைத் தொழுதுகொள்ளும்படி கர்த்தருடைய ஆலயத்திற்கு போக விரும்பினார். தாவீதைப் போலவே நாமும் நன்றியுள்ள இருதயத்தோடு தேவனை ஆராதிக்க தேவாலயத்திற்குச் செல்ல வேண்டும். நம்மைப் படைத்த தேவனில் மகிழ்வோம். தம்முடைய குமாரனை நமக்காக மரிக்க அனுப்பி, பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை இரட்சிக்கும் அளவுக்கு நம்மை நேசிக்கிறவரை நேசிப்போமாக. ஒவ்வொரு நாளும் அவர் நமக்குத் தரும் ஜீவசுவாசத்திற்காக அவரைத் துதிப்போம். கர்த்தருடைய பிரசன்னத்தில் பயபக்தியுடன் இருப்பதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவோம். நம் வாழ்வில் கார்த்தருடைய பிரசன்னத்தோடு அவருக்கு சேவை செய்வோம். தேவனுடைய ஆலயத்துக்கு செல்வதற்கு ஆர்வமோ, உற்சாகமோ இல்லாத நேரங்கள் இருந்தன என்பதை நாம் அறிக்கையிட வேண்டும். நாம் தேவனை ஆராதிக்க மனமகிழ்ச்சியோடு அவருடைய ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். எபிரெயர் 10:25 சொல்லுகிறது, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.”
Amen!
ReplyDeleteThanks, Shirley.
ReplyDelete