"Blog Y2 082 - Praise God with joyful hearts."
I will give You thanks in the great assembly; I will praise You among many people. Psalm 35:18.
King David expresses his intention to give thanks and praise to God in the great congregation and among many people. This verse is part of a larger passage where David cries out to God for deliverance from his enemies. He asks God to contend with those who strive against him and to fight against those who fight against him. This verse highlights David's unwavering trust in God's faithfulness and his commitment to publicly proclaim God's goodness. It emphasizes the power of public worship and the importance of praise and thanksgiving. God continually blesses us in countless ways, and like David, we are called to worship Him with all our hearts. Do you praise and worship God with the same passion and dedication as David? Psalm 111:1 says: "Praise the LORD! I will praise the LORD with my whole heart, In the assembly of the upright and in the congregation."
மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். சங்கீதம் 35:18.
தாவீது ராஜா பெரிய சபையிலும் அநேக ஜனங்கள் மத்தியிலும் தேவனுக்கு நன்றியும் துதியும் செலுத்த தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். இந்த வசனம் ஒரு பெரிய பாகத்தில் ஒரு பகுதியாகும், இங்கு தாவீது தனது எதிரிகளிடமிருந்து விடுதலைக்காக தேவனிடம் கூப்பிடுகிறார். இதில் தாவீது ராஜா தனது எதிரிகளிடமிருந்து மீட்பு பெற தேவனை முழுமையாக நம்புவதையும் அவரது உறுதியையும் வலியுறுத்துகிறது. பொதுவாக ஆராதனைகளில் தேவனை ஆராதிப்பதின் சக்தியையும் நன்றி கூறுவதின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது. தேவன் தொடர்ந்து எண்ணற்ற வழிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறார், தாவீதைப் போலவே, நம் முழு இருதயத்தோடும் அவரை வணங்க அழைக்கப்படுகிறோம். தாவீதைப் போன்ற அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் நீங்கள் தேவனைத் துதித்து வணங்குகிறீர்களா? சங்கீதம் 111:1 கூறுகிறது: "அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.”
Comments
Post a Comment