Blessings and prosperity will be yours. Psalm 128:2
God has given a great promise today: "Blessings and prosperity will be yours." God told Moses to share this with the people of Israel, "The blessing will come if you obey the commandments of the LORD your God, which I command you today." When we obey His word and follow Him faithfully, all blessings will follow us. When we strive to listen to His voice, we will be blessed. The Bible also says that the blessing of the Lord makes us rich, and He adds no sorrow with it. Let us join in prayer with John, Jesus' disciple: "Beloved, I pray that you may prosper in all things and be in good health, just as your soul prospers."
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். சங்கீதம் 128:2
'ஆசீர்வாதமும், நன்மையும் உங்களுக்கு இருக்கும்' என்று கடவுள் இன்று ஒரு பெரிய வாக்குறுதியை அளித்துள்ளார். இதை இஸ்ரவேல் ஜனங்களோடு பகிர்ந்துகொள்ளும்படி தேவன் மோசேயிடம் சொன்னார், 'இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் வரும்.' நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவரை உண்மையாகப் பின்பற்றும்போது, எல்லா ஆசீர்வாதங்களும் நம்மைப் பின்தொடரும். அவருடைய குரலுக்கு செவிசாய்க்க முயலும்போது, நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. இயேசுவின் சீடரான யோவானுடன் சேர்ந்து நாமும் இவ்விதமாக ஜெபிப்போம்: "பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்."
Comments
Post a Comment