"What is the reward for those who trust in the Lord?"
The Lord is good, a stronghold in the day of trouble; and He knows those who trust in Him. Nahum 1:7.
Every part of today's verse shows encouragement. It speaks about the goodness of the Lord and how He helps us. He cares more for those who put their trust in Him. King David says, "Taste and see that the Lord is good." We can taste His goodness only when we have a good relationship with Him. A stronghold is defined as a place that has been fortified to protect against attack. He protects us as our refuge, strength, and stronghold during our difficult times. God knows us very well. God expects us to pour our hearts out to Him. Let us echo King David, "Trust in Him at all times, you people; Pour out your heart before Him; God is a refuge for us."
கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம் 1:7.
இன்றைய வசனத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. இது கர்த்தரின் நன்மையைப் பற்றியும், அவர் நமக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதைப் பற்றியும் பேசுகிறது. அவர்மீது நம்பிக்கை வைப்பவர்களை அதிகமாக விசாரிக்கிறவராக இருக்கிறார். தாவீது ராஜா, "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்கிறார். அவருடன் நல்லுறவு வைத்துக் கொள்ளும்போதுதான் அவருடைய நற்குணத்தை ருசிக்க முடியும். ஒரு கோட்டை என்பது தாக்குதலுக்கு எதிராக பாதுகாக்க பலப்படுத்தப்பட்ட இடமாக வரையறுக்கப்படுகிறது. நம்முடைய இக்கட்டான காலங்களில் அவர் நமக்கு அடைக்கலமாகவும், பலமாகவும், கோட்டையாகவும் இருந்து பாதுகாக்கிறார். தேவன் நம்மை நன்றாக அறிவார். நம் இதயங்களை அவரிடம் ஊற்ற வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். தாவீது ராஜா சொன்னதை நாமும் சேர்ந்து சொல்லுவோம், "ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள், தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்."
Comments
Post a Comment