"Five 'I's for Each of Us"
Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you, I will uphold you with My righteous right hand.’ Isaiah 41:10
In this world, we fear everything happening around us. Today's verse is a great promise of comfort with five 'I's for each of us: 'I' am with you; 'I' am your God; 'I' will strengthen you; 'I' will help you; and 'I' will uphold you. What a great, loving, and caring God we have. God is bigger than all our problems. He wants us to trust Him, knowing that He is enough, no matter what. He is there for us in our difficult times to strengthen us. In Psalm 46:1, King David says, "God is our refuge and strength, a very present help in trouble."
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41: 10
இந்த உலகில், நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்கும் நாம் பயப்படுகிறோம். இன்றைய வசனம் நம் ஒவ்வொருவருக்கும் ஐந்து 'நான்' என்ற ஆறுதலின் சிறந்த வாக்குறுதியைக் கொடுக்கிறது : 'நான்' உன்னுடன் இருக்கிறேன்; 'நான்' உன் தேவன்; 'நான்' உன்னைப் பலப்படுத்துவேன்; 'நான்' உனக்கு உதவுகிறேன்; 'நான்' உன்னை ஆதரிப்பேன். எவ்வளவு பெரிய, அன்பான, அக்கரையுள்ள தேவன் நம்மிடம் இருக்கிறார். தேவன் நம் எல்லா பிரச்சனைகளையும் விட பெரியவர். எதுவாக இருந்தாலும் அவர் போதுமானவர் என்பதை அறிந்து நாம் அவரை நம்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பலவீனமான காலங்களில் நம்மைப் பலப்படுத்த அவர் இருக்கிறார். சங்கீதம் 46:1-ல், தாவீது ராஜா கூறுகிறார், "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்."
.jpg)
Comments
Post a Comment