"Overcome evil with good."
Apostle Paul teaches that as followers of Christ, we should not retaliate or seek revenge when wronged. Instead, we are called to always pursue what is good for ourselves and for others. Rather than seeking opportunities to pay back offenders, we should look for opportunities to forgive and bless them. The Bible says, “Overcome evil with good” through direct acts of kindness. If someone wrongs you, not only forgive them but also do them a favor. Let us always strive to do good to one another and to everyone. By living this way, we reflect the love and grace of Christ. In doing so, we become peacemakers in a world that desperately needs peace. Romans 12:17 says, "Repay no one evil for evil. Have regard for good things in the sight of all men."
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள். உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:15.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நாம் அநீதி இழைக்கப்படும்போது பதிலடிகொடுக்கவோ, பழிவாங்கவோ கூடாது என்று அப்போஸ்தலர் பவுல் போதிக்கிறார். மாறாக, நமக்கும் பிறருக்கும் நன்மையானவற்றை எப்போதும் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் விதமாக திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுவதற்குப் பதிலாக, அவர்களை மன்னித்து ஆசீர்வதிப்பதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும். மற்றவர்களிடம் நேரடி இரக்கச் செயல்களின் மூலம் "தீமையை நன்மையால் வெல்லுங்கள்" என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. யாராவது உங்களுக்கு தீங்கு செய்தால், அவர்களை மன்னிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு உதவியையும் செய்யுங்கள். நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் மற்றும் அனைவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்போம். இப்படி வாழ்வதன் மூலம், கிறிஸ்துவின் அன்பையும் கிருபையையும், பிரதிபலிக்கிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், சமாதானம் மிகவும் தேவைப்படும் உலகில் நாம் சமாதானம் செய்பவர்களாக மாறுகிறோம். ரோமர் 12:17 கூறுகிறது, "ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள், எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்."
Comments
Post a Comment