"God Gives Peace to the Heavy and Troubled Heart"

Now may the Lord of peace Himself give you peace always in every way. The Lord be with you all. 2 Thessalonians 3:16.

This reminds us that true peace comes from God, the Lord of Peace. The peace of God is inner peace, a perfect peace—not as the world gives. It is beyond our understanding. The Prince of Peace, who came to this world and lived as a sinless man, was despised and rejected by men, a man of sorrows, crucified and died on the cross for our sins. He is our risen Savior, giving peace to all whose hearts are heavy and troubled. When Jesus ascended to Heaven, He sent the Holy Spirit to dwell in our hearts, to lead and guide us, and to give us peace. Today, if we seek that peace by calling upon His name, He will take control of our lives, strengthen us, be with us always to overcome every situation, and lead us to eternity. Philippians 4:7 says, “And the peace of God, which surpasses all understanding, will guard your hearts and minds through Christ Jesus.”

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. II தெசலோனிக்கேயர் 3:16.

உண்மையான சமாதானம், சமாதானத்தின் கர்த்தராகிய தேவனிடமிருந்து வருகிறது என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. தேவனுடைய சமாதானம் ஒரு ஆன்மீக சமாதானம், ஒரு பரிபூரண சமாதானம் - உலகம் கொடுப்பது போல் அல்ல.அது நம் நினைவிற்கு அப்பாற்பட்டது. இந்த உலகத்திற்கு வந்து, பாவமில்லாத மனிதனாக வாழ்ந்து, மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, துக்கம் நிறைந்தவருமாக, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்த சமாதானப் பிரபு. அவர் நமது உயிர்த்தெழுந்த இரட்சகர், கவலை மற்றும் கலங்கிய இருதயத்தோடு இருப்பவர்களுக்கு  சமாதானத்தைக் கொடுக்கிறார். இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்றபோது, நம் இருதயங்களில் வாசம் செய்யவும், நம்மை வழிநடத்தவும், நமக்கு சமாதானத்தைக் கொடுக்கவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார். இன்று, அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறதின் மூலம் நாம் அந்த சமாதானத்தை நாடினால், அவர் நம் வாழ்க்கையை காத்துக்கொள்ளுவார், நம்மை பெலப்படுத்துவார், ஒவ்வொரு சூழ்நிலையையும் மேற்கொள்ள எப்போதும் நம்முடன் இருப்பார், நம்மை நித்தியத்திற்கு வழிநடத்துவார். பிலிப்பியர் 4:7 சொல்லுகிறது: "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”


 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Blog Y2 054 - Seek God's Light and Walk in Faith"

"Blog Y2 023 - You are Called to Love and Follow God"

"Blog Y2 041 - Reflect God's love through actions"

Blog # Y2 013 - "God Turns Troubles into Blessings"

"We need to submit ourselves to Christ"

"Blog Y2 080 - Humility brings honor and peace"

"Blog Y2 018 - God’s Voice Brings Comfort and Peace."