"Trust in God, He Guides"

I will instruct you and teach you in the way you should go; I will guide you with My eye. Psalm 32:8.

This is such an encouraging promise for those who put their trust in God alone. The Bible says many children of God followed Him faithfully, and God guided and blessed them. One righteous person was Noah, who was blameless among the people of his time and walked faithfully with God. He found favor in the eyes of God, and God instructed him to build an ark to save his family from the dangerous flood. Similarly, in Abraham's life, God blessed him as a great nation because he obeyed God and did everything He required of him, keeping His commands, His decrees, and His instructions. If we also trust in the Lord with all our hearts and do not rely on our own strength and wisdom, He will teach us and guide us with His eyes. Proverbs 3:5, 6 says, "Trust in the Lord with all your heart, And lean not on your own understanding; In all your ways acknowledge Him, And He shall direct your paths."

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். சங்கீதம் 32:8.

தேவன் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பவர்களுக்கு இது ஒரு உற்சாகமூட்டும் வாக்குறுதியாகும். தேவனுடைய பிள்ளைகள் பலர் அவரை உண்மையுடன் பின்பற்றினார்கள், தேவன் அவர்களை வழிநடத்தி ஆசீர்வதித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு நீதிமான் நோவா, அவர் தனது காலத்து மக்கள் மத்தியில் குற்றமற்றவராக இருந்தார், தேவனுடன் உண்மையாக நடந்துகொண்டார். அவர் தேவனின் கண்களில் தயவு  பெற்றார், ஆபத்தான வெள்ளத்திலிருந்து அவரது குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டும்படி தேவன் அவருக்குச் சொன்னார். அதேபோல், ஆபிரகாமின் வாழ்க்கையில், அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளையும், நியமங்களையும், அவருடைய ஆணைகளையும் கைக்கொண்டு, அவருக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்தபடியால், தேவன் அவனை ஒரு பெரிய தேசமாக ஆசீர்வதித்தார். நாமும் நமது சொந்த பலத்தின்மீதும் ஞானத்தின் மீதும் சார்ந்திருக்காமல், முழு இருதயத்தோடும் கர்த்தரை நம்பினால், அவர் நமக்குப் போதித்து, அவர் நம்மேல்  கண்ணைவைத்து வழிநடத்துவார். நீதிமொழிகள் 3:5,6 சொல்லுகிறது, "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."

 

Comments

Search This Blog

Popular posts from this blog

"Honor the Lord"

"Jesus forgives, expects us likewise."

Blog # 358 - "Trust in God's unchanging power"

"Blog Y2 052 - Living by God's Word daily"

Blog # Y2 002 - "Choose God's Will Over the World"

Blog # 365 - "Trusting in God's Compassion and Care"