"Blog Y2 063 - Rejoice and Magnify the Lord."
Let all those who seek You rejoice and be glad in You; Let such as love Your salvation say continually, “The Lord be magnified!” Psalm 40:16.
Today's verse encourages everyone who seeks the Lord to rejoice and be glad in Him. God's love, truth, and salvation give us every reason to celebrate and worship our Creator. Our mission is to show that God is most glorified in us when we find our deepest satisfaction in Him. Rejoicing in the Lord means choosing joy even in hard times, which reveals the depth of our relationship with Him. King David urged people to focus on God's goodness and rejoice. God is honored when we are satisfied with Him. He is magnified when our relationship with Him is deep, our love for others is wide, and our trust in Him is high. Will you choose to rejoice in the Lord and magnify Him, even in difficult times? 1 Chronicles 16:10 says: “Glory in His holy name; Let the hearts of those rejoice who seek the LORD!”
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. சங்கீதம் 40:16.
இன்றைய வசனம் கர்த்தரைத் தேடுகிற ஒவ்வொருவவரும், அவரில் களிகூர்ந்து மகிழ வேண்டும் என்று ஊக்குவிக்கிறது. தேவனின் அன்பு, சத்தியம், இரட்சிப்பு ஆகியவை நம் சிருஷ்டிகரைப் போற்றிப் புகழ்வதற்கு நமக்குப் போதுமான காரணங்களைத் தருகின்றன. அவரில் நமது ஆழ்ந்த திருப்தியைக் காணும்போது, தேவன் நம்மில் மிகவும் மகிமைப்படுகிறார் என்பதைக் காண்பிப்பதே நம்முடைய நோக்கம். கர்த்தரில் களிகூருவது என்பது கடினமான காலங்களில் கூட மகிழ்ச்சியோடிருப்பதாகும், இது அவருடனான நமது உறவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய நற்குணத்தில் கவனம் செலுத்தி சந்தோஷப்பட வேண்டும் என்று தாவீது ராஜா மக்களை உற்சாகப்படுத்தினார். நாம் அவரில் திருப்தியடையும்போது தேவன் கனப்படுத்தப்படுகிறார். அவருடனான நமது உறவு ஆழமாகவும் , மற்றவர்கள் மீதான நமது அன்பு விரிவானதாகவும், அவர் மீதான நமது நம்பிக்கை அதிகமானதாகவும் இருக்கும்போது அவர் மேன்மையடைகிறார். கடினமான காலங்களில் கூட கர்த்தரில் களிகூரவும், அவரை மகிமைப்படுத்தவும் நீங்கள் முடிவு செய்வீர்களா? 1 நாளாகமம் 16:10 சொல்லுகிறது: “அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.”
Comments
Post a Comment